பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள் கட்டளை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றம், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, ஊடகங்களை ஒடுக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 21 ஆம் திருத்தத்தில் நாங்கள் ஏதேனும் வெற்றியை பெற்றுள்ளோம். அதனூடாக பெற்ற வெற்றியின் ஊடாக நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நிறுவனங்களின் சுயாதீனத்துவம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்போது பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை பயன்படுத்தி அதனை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர்.
உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களை, அவர்கள் வழங்கிய தீர்ப்பொன்று தொடர்பில் சிறப்புரிமை குழுவுக்கு அழைக்க முயற்சிக்கப்படுகின்றது. எப்படி தீர்ப்பின் மூலம் எம்பிக்களின் சிறப்புரிமை பாதிக்கப்படும் என்றார்.
#SriLankaNews
Leave a comment