Elon Musk 16494179903x2 1
ஏனையவை

மனித மூளைக்குள் சிப் – விரைவில் பரிசோதனை என எலான் மஸ்க் அறிவிப்பு

Share

மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி மனிதர்கள் மத்தியில் சோதனை செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மூளைக்குள் சிப்பை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் வகையில் இந்த பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த சிப்களில் ஒன்றை தானே செலுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட உள்ளது. அதன்மூலம், மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்த முடியும். இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, தங்களை அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மஸ்க் கூறினார்.

எலான் மஸ்கின் ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங்க் இதனை மேற்கொள்கிறது. இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூராலிங்க் சோதனை தொடங்கும். மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

இந்த சிப் ஒரு சிறிய நாணயத்தின் அளவில் இருக்கிறது. நியூராலிங்க் 2021ஆம் ஆண்டில் ஒரு வீடியோவை வெளியிட்டது, அதில் ஒரு குரங்கு தனது மூளையில் பொருத்திய சிப்பை பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடுவதைக் காண முடிந்தது.

இந்த சிப் மூலம் மனிதர்கள் இழந்த பார்வையை பெற முடியும். முதுகுத் தண்டு எலும்பு முறிவு அல்லது பக்கவாதத்தால் முற்றிலுமாக ஊனமுற்றவர்களை மறுவாழ்வு செய்வதிலும் நியூராலிங்கின் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும்.

மூளையில் எந்த நியூரான் செயலிழந்ததோ அதனை இந்த சிப் மூலம் தூண்டிவிட்டு வேலை செய்ய வைக்கமுடியும் எனக் கூறுகின்றனர்.

நியூராலிங்க் நிறுவனத்தின் இந்த சோதனை வெற்றியடைந்தால், சிப் உதவியுடன் கணினியைக் கட்டுப்படுத்த முடியும். சிப் பொருத்தப்பட்டவரின் மனதில் நினைக்கும் வேலையை கணினி செய்யும்.

#World #technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...