ஏனையவை
எலான் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு! – விசாரணை ஒக்டோபரில்


உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்த நிலையில், 44 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டர் நிர்வாகத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்ததார்.
இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், 2 மாதமாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது. இதனால் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த 9-ம் தேதி அதிரடியாக அறிவித்தார்.
டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர்மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டுமென டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு டெல்லவிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்குமாறு எலான் மஸ்க் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.