ரஷ்ய எரோப்ளோட் விமான சேவையின் முதலாவது விமானம் பயணிகளுடன் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை நேற்று 240 விமானிகளுடன் நாட்டை வந்தடைந்தது.
தற்போது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்தில் இருமுறை சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 5 சேவைகளாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரியவருகிறது.
குறித்த சேவை 1964 ஆம் ஆண்டு இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மிக பழமையான ஏரோப்ளோட் விமானசேவையாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment