rajkumar
ஏனையவை

இந்தியா எதையும் பெற்றுத்தராது!!

Share

சிங்களவர்களிடம் இருந்து தமிழர்களுக்கு இந்தியா எதையும் பெற்றுத் தராது என காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார்.

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் போராட்டம் ஆரம்பித்து 2,200ஆவது நாளான இன்று (27) வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கோ. ராஜ்குமார்,

“இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளைப் பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம் தொடர்கிறது.

“இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வடக்கு-கிழக்கு இணைப்பு, குருந்தூர் மலை, உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை அனைத்தும் இலங்கையின் நீதித்துறை தமிழர்களுக்கு எதிரானது என்பதை சுட்டிக் காட்டுகின்றன.

“ஒருவேளை, இந்த இலங்கையின் நீதித்துறை சிங்களவர்களுக்குப் பயன்படலாம். வடக்கு, கிழக்கில் தமிழ் நீதியரசர்களின்  தீர்மானம் எதுவாக இருந்தாலும், அரசாங்கமோ, கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றங்களோ, உச்ச நீதிமன்றமோ அதனை மதிக்காது நிராகரித்துவிடும்.

“எனவே, தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவியை தமிழர்களாகிய நாம் அனைவரும் கோர வேண்டும்.

“சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதையும்  பெற்றுத் தரும் என்று நம்ப வேண்டாம். அவர்கள் தமிழர்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.

“ரஷ்யாவின் புட்டின் மற்றும் அவரது தளபதிகளால் உக்ரைன்கள் மீதான கொடூரமான கொலைகளைக் கண்டிக்காமல் ஐ.நா வாக்கெடுப்பில் நடுநிலை வகித்ததால் இந்தியா தனது மனித உரிமை அந்தஸ்தை இழந்தது.

“ஐ.நா.வின் வாக்கெடுப்புக்குப் பிறகு இந்தியா உலகளவில் தனது செல்வாக்கை இழந்தது. நமது இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவிக்காக பிரார்த்தனை செய்வோம்” என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...