” கல்வீச்சுத் தாக்குதலுக்கு பதில் துப்பாக்கிச்சூடா பொலிஸ்மா அதிபரே? ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மற்றும் கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.” இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை...
கேகாலை மாவட்டம், ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், பொலிஸார் உட்பட காயமடைந்த மேலும் 24 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளை, மக்களின் கல்வீச்சுத் தாக்குதலில் பொலிஸ்...
தங்களின் மீட்பர்கள் என்று சிங்கள மக்கள் யாரை நம்பினார்களோ அவர்களை இன்று அடித்து – துரத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டம் சிங்கள மக்களுக்கானது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதே பொருத்தம். இந்தப் போராட்டத்துக்கு இடையில்...
காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக நடாத்தப்படும் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அடையாளப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. பொதுமக்களின் வாழ்வுரிமைக்காக காலிமுகத்திடலில் நடாத்தப்படும் போராட்டத்துக்கான தமது தார்மீக ஆதரவை...
” மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்” – என அறைகூவல் விடுத்து, தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை இன்று (18) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த பாத யாத்திரை நேற்று முற்பகல்...
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் ஜனாதிபதி செயலகத்தை வைத்து இன்றிரவு சாகசம் புரிந்துள்ளனர். தொழில்நுட்ப முறைமையைப் பயன்படுத்தி ஜனாதிபதி செயலகத்தை மின்னொளியில் ஒளிரச் செய்து ராஜபக்சக்கள் அணியும் சால்வையை ஜனாதிபதி செயலகத்துக்கு தொழில்நுட்ப முறையில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர்...
காலிமுகத்திடலில் கோட்டாபய அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்துக்கு கம்பன் கழகத்தின் நிறுவுநர் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையிலான குழுவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டக் களத்துக்கு இன்று அவர்கள் நேரடியாகச் சென்று அரசுக்கு எதிராகக்...
காலிமுகத்திடலில் இன்று மாலை தமிழ் மொழியில் மிகவும் உணர்வுப்பூர்வமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் தொடர் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் போராட்டக் களத்தில் நேற்று...
” மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்” – என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படும் பாத யாத்திரை இன்று முற்பகல் களுத்றை, பேருவளை நகரில் ஆரம்பமானது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய...
ஏப்ரல் 20 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி, வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு உழைக்கும் மக்களின் எதிர்ப்பை ஒன்று திரட்ட தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன – என்று தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விசேட கூட்டறிக்கையொன்றும்...
“கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
எதிர்காலச் சந்ததியினருக்கான தாய்நாட்டைப் பாதுகாக்கும் வகையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் இலங்கைவாழ் அனைத்துத் தமிழர்களும் கலந்துகொள்ளுமாறு சிங்களக் கலைஞர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்களால் தமிழ்மொழியை சரளமாகப் பேச முடியாமைக்கு வெட்கப்படுவதாகக் கவலை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு தன்னெழுச்சி போராட்டத்துக்கு ஆதரவு வலுத்துவரும் நிலையில், ஆதிவாசிகளும் போராட்ட களம் வந்துள்ளனர். ‘கோட்டா கோ கம’ போராட்ட களத்துக்கு...
“மக்களின் அமைதியான போராட்டத்தைச் சீர்குலைக்கும் அரசின் முயற்சி நாட்டுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.” – இவ்வாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில்...
காலி முகத்திடலில் இன்று காலை திடீரென குவிக்கப்பட்ட பொலிஸ் கனரக வாகனங்கள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் இன்று 8 ஆவது நாளாகவும்...
காலிமுகத்திடல் பகுதியில் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் கனரக வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் தகல்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் தன்னெழுச்சி...
கொழும்பு – காலிமுகத்திடலில் தொடர்ந்து ஏழாவது நாளாக இடம்பெற்று வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார். தொடர்ந்தும் இந்தப்...
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், நஸீர் அஹமட் மற்றும் பைசல்...