அனைத்து பாடசாலைகளிலும் சகல மாணவர்களுக்குமான வகுப்புக்கள் சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன என கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தல் விடுத்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள்...
மேல் மாகாணத்தில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத 505 வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் மேல் மாகாணத்தில் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றாத 318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கும்...
இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை (15) முதல் மன்னார் மாவட்டத்தில், வியாபார நிலையங்கள், சந்தைகள், பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்திச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இம்முறையானது மன்னாரில் நடைமுறைக்கு...
கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர் தொகை அதிகரித்துள்ளது என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையின்படி, நேற்றைய தினம் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 52 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தளவில்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 வீதத்தால் அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலைமை தொடருமானால் நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை உருவாகும் எனவும், எனவே, மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த 14 நாட்களாக தன்னுடைய...
“போராட்டங்கள் மற்றும் பேரணிகளால் மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம். “- என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2வது தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நாளை 12 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் 15ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது....
நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் இந்த நடைமுறை சரியாக பேணப்படுகின்றமையை புகைப்படக்காரர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். மேலும், நிகழ்வுகளில்...
” மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும்.”- என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது...
கொரோனா கட்டுப்பாடுகள் பகுதி பகுதியாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில், பொது நிகழ்வுகள் மற்றும் வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிக்கையில்,...
அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 – தரம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகள், தற்போது பகுதி பகுதியாக தற்போது மீண்டும்...
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில், மீண்டும் கொரோனாத் தொற்றுக்குள்ளாவோர் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் நிலைமையை விளங்கி அவதானமாக...
கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே,...
எதிர்வரும் பெப்ரவரி மாத முடிவுக்குள் ஐரோப்பாவில் ஐந்து லட்சம் மக்கள் கொரோனாத் தொற்றால் உயிரிழக்க வாய்ப்புக்கள் உள்ளன என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. அண்மைக்காலமாக ஐரோப்பாவில் குறைவடைந்து வந்த கொரோனாவின் பாதிப்பு நிலைமைகள்,...
வட மாகாணத்தில் புதிதாக இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புக்கள் தற்போது வெகுவாக குறைவடைந்து வருகின்றன என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், வடமாகாணத்தில்...
இப் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் – என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்...
கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 612 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும் ...
பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் உட்பட பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்குச் செல்லும்போது, தடுப்பூசி அட்டையை கொண்டுசெல்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா...
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 11 மற்றும் தரம் 12இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல்...