ரயிலுடன் மோதுண்ட இளைஞர் பலி!

Accident 1

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவை – கொழும்பு ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் உரிரிழந்த 19வயதான இளைஞர் இரத்தினபுரி – நிவித்திகல பகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version