ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயாராக இருப்பதாகவும், ஆனால் இரகசிய அரசியல் பேரங்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்வும் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசியலை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவே முன்னெடுப்பதாகவும் , தனிநபர்களின் நலன்களை விட நாட்டு மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் எவரும் இணைந்துகொள்ளலாம் என அழைப்பு விடுத்த அவர், கடந்த காலங்களில் பலர் விலகிச் சென்றாலும், புதியவர்கள் இணைந்துள்ளதாகவும், கட்சியை பலப்படுத்த அனைவரையும் ஒன்றிணைப்பதே தமது பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

