police
செய்திகள்இலங்கை

யாழில் இளைஞர் ஒருவரின் மோசமான செயல்! – பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

Share

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில், மது போதையில் அட்டகாசம் புரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில், செபஸ்ரியன் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் மது போதையில் இளைஞன் ஒருவர், தாய் மீதும் வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த இளைஞனை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

எனினும், குறித்த இளைஞர் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததுடன், வீட்டில் இருந்த வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு பொலிஸாரை வெட்ட முயற்சித்துள்ளார்.

அதனையடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன், இளைஞனை கைதுசெய்துள்ளனர். அத்துடன், இளைஞனிடம் இருந்த வாளையும், பொலிஸார் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
7
இலங்கைசெய்திகள்

பொலிஸ் காவலில் 5 ஆண்டுகளில் 49 மரணங்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 49பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மரணமடைந்துள்ளதாக மனித உரிமைகள்...

6 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏற்படவுள்ள அதிகார மாற்றம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலகளாவிய அதிகார போராட்டம் எதிர்காலத்தில் இலங்கையில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுக்க கூடும் என முன்னாள் ஜனாதிபதி...

5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...