world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

Share

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண் திருமணமானவர் என்ற போதிலும், அவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையே நீண்டகாலமாகத் காதல் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு மற்றும் நீண்டகால மோதல் காரணமாகவே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாகப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் வெல்லவாய, நெட்டோலகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லவாய பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். தனிப்பட்ட கோபம் காரணமாகப் பட்டப்பகலில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...