மாட்டு வண்டியுடன் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு!

WhatsApp Image 2022 02 20 at 11.01.01 PM

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி, யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்திற்கு அருகாமையில் நேற்றையதினம் (19) மோட்டார் சைக்கிளும் மாட்டு வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தில் படுகாயமடைந்த  இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மூளாய் பகுதியைச் சேர்ந்த சின்னையா லோகேஸ்வரன் (வயது 32) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Exit mobile version