gallerye 015340202 3099397
உலகம்செய்திகள்

‘அடுத்து நீங்கள் தான்’ – ஹாரி பாட்டர் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்

Share

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரான ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங்குக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நேற்று முன்தினம் பொது நிகழ்வொன்றில் வைத்து கத்திகுத்துக்கு இலக்கனார். தாக்குதலில் படுகாயமடைந்த அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், தற்போது ஹாரி பாட்டர் கதையை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இவர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி. உடல்நிலை சரியில்லாதது போல் உணருகிறேன். அவர் நலமுடன் இருக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார்.

ஜே.கே.ரவ்லிங் டுவிட்டர் பதிவிற்கு கீழே கருத்து பதிவிடும் பகுதியில், மீர் ஆசிப் அஜீஸ் என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு கொண்ட நபர், ‘கவலைப்படவேண்டாம் அடுத்து நீங்கள் தான்’ என கொலை மிரட்டல் விடுத்து டுவிட் செய்துள்ளார்.

இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...