பல்கலையில் துப்பாக்கி சூடு! – 8 பேர் பலி
ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
இன்று (20) காலை பல்கலைக்கழக ஒரு மாணவன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான்,
மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் காயங்களுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
இந்த சம்பவத்தின் போது மாணவர்கள், ,ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டடத்துக்குள்ளே இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டிடத்துக்குள் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பித்த சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
Leave a comment