turkey
உலகம்செய்திகள்

5 மீட்டர் நகர்ந்த துருக்கி- அறிவியலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

Share

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக, எல்லையோர நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நிலநடுக்க அறிவியலாளர்களில் ஒருவரான இத்தாலிய நாட்டு விஞ்ஞானியான பேராசிரியர் கார்லோ டாக்லியோனி கூறும்போது, டெக்டானிக் தட்டு பகுதிகளில் துருக்கி அமைந்து உள்ளது. இந்த தட்டுகளிடையே ஏற்பட்ட மோதலால், துருக்கி நாடு 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்க கூடும் என கூறியுள்ளார்.

இது அண்டை நாடான சிரியாவுடனான ஒப்பீட்டு அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளது. அராபிக்கா தட்டுடன் தென்மேற்கு பகுதியை நோக்கி அனடோலியன் தட்டு நகர்ந்ததில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், லெபனான் தலைநகர் பெய்ரூட், சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இதில், குறிப்பிடும்படியாக துருக்கியின் நிலப்பரப்புக்கு கீழே ஒரு தட்டு மேற்கு நோக்கியும் மற்றொரு தட்டு கிழக்கு நோக்கியும் நகர்ந்து உள்ளன. இதில் ஏற்பட்ட அதிர்வில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அளவிலான நிலநடுக்கம் உருவாகி உள்ளது.

அனடோலியன், அராபிக்கா, யுரேசியன் மற்றும் ஆப்ரிக்கன் ஆகிய 4 தட்டுகள் தொடர்ச்சியாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.2 என்ற அளவிலான இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன என்றும் டாக்லியோனி கூறியுள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...