ezgif 5 a121d0d712
உலகம்செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது

Share

துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்தநிலையில் நிலநடுக்கத்தால் துருக்கியில் ஒரு கிராமமே முற்றிலும் அழிந்துள்ளது. அந்நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.

நிலநடுக்க மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டிட இடிபாடுகளில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என்று மோப்ப நாய் மற்றும் கேமராக்கள் மூலம் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

மேலும் சில இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து யாராவது உதவி குரல் எழுப்புகிறார்களா என்று சோதனை செய்யப் டுகிறது. அப்படி குரல் ஏதாவது கேட்டால் இடிபாடுகளை அகற்றுகிறார்கள். கஹ்ரமன்மரஸ் மாகாணத்தில் 183 மணி நேரத்துக்கு பிறகு 10 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். அதே போல் ஹடாய் மகாணாத்தில் 182 மணி நேரத்துக்கு பிறகு 13 வயது சிறுமி மீட்கப்பட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...