tamilni 209 scaled
உலகம்செய்திகள்

பல மாதங்கள் ஆனாலும் போராட தயார்: இஸ்ரேல் சூளுரை

Share

பல மாதங்கள் ஆனாலும் போராட தயார்: இஸ்ரேல் சூளுரை

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களாகத் தொடர்ந்துவரும் நிலையில், ஹமாஸை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் – இஸ்ரேலில் அத்துமீறி தாக்குதலை நடத்தினர்.

இதில் 1200ற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகினர். 240 பேரை பிணைக்கைதிகளாகக் கடத்தி செல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்ததோடு தரைவழி தாக்குதலாக விரிவுப்படுத்தி உள்ளது.

இதில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 17,700யை கடந்துள்ளதாகவும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவின் மக்கள் தொகையில் 90 சதவிகிதத்தினர் இடப்பெயர்வுக்கு ஆளாகி இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் போர் பிரகடனம் செய்து காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி யோவ் காலன்ட் கூறியதாவது,

“காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வரும்.

காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.

நாங்கள் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன்.

அப்படி அவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து நாங்கள் யோசிப்போம். கடந்த சில நாட்களாக ஹமாஸ் அமைப்பினர் சரணடைந்துள்ளனர்.

யாரெல்லாம் சரணடைகிறார்களோ அவர்கள் உயிர்கள் காக்கப்படும். இதன்படி ஹமாஸின் உயர்நிலை அதிகாரிகள் சரணடைய வேண்டும், அல்லது உயிரை தியாகம் செய்ய வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...