போலி இத்தாலிய விசா மூலம் ஆட்கடத்தல்!
போலி இத்தாலிய விசா மூலம் ஆட்கடத்தலில் ஈடுபட முயன்ற இருவர் கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்றுமுன் தினம் (09) இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரிகள் போலி விசா மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்ற இருவரை விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் இந்த கடத்தல் குறித்த தகவல்களை வெளியாகியுள்ளன.
இந்த கடத்தல்காரர்கள் இத்தாலி விசாவிற்காக 25 இலட்சத்து 17 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மற்றும் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Leave a comment