F7FPIxe0vejIuMplLoQs 1
இலங்கைஉலகம்செய்திகள்

நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை!

Share

ஓமானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணிப்பெண்களை காப்பாற்றி நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு தடுத்து வைக்கப்பட்டோர் உருக்கமாக கோரிக்கை விடுத்து காணொளி வெளியிட்டுள்ளனர்.

இலங்கை முகவர்கள் ஊடாக ஒமானுக்கு பணிப்பெண்களாகச் சென்ற 75 பணிப் பெண்கள், அங்கு பணிபுரிந்து வந்த வீடுகளின் உரிமையாளர்களால் அடித்து மற்றும் நெருப்பால் சூடு வைத்தும் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதை காரணமாக அங்கிருந்து வெளியேறி இலங்கை தூதரகத்தில் 9 மாதங்களாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் வெளியிட்ட காணொளி பதிவில் கூறியுள்ளதாவது, தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்களை (சேவ் கவுஸ்) என்ற இடத்தில் தங்க வைத்துள்ளனர்.

மேலும், தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியாதளவிற்கு அடைத்து வைத்துள்ளனர்.

பலர் பல நோய்களினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றதுடன், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போல எங்களை நடத்துகின்றனர்.

இங்கு நடக்கும் அட்டூழியங்கள் எதுவும் வெளியே தெரிவிக்க முடியாத நிலையிலுள்ளதுடன், இங்கிருந்து நாட்டுக்குச் செல்லுகின்ற பெண் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் நாங்கள் உரையாடி அவரிடம் இதனை வெளியிடுமாறு தெரிவித்துக் கதைத்து அனுப்பியுள்ளோம்.

எனவே எங்களை இங்கிருந்து காப்பாற்றுங்கள் கைகூப்பி கேட்கின்றோம். என கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள காணொளியில் பதிவிட்டுள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...