ezgif 1 b778975471
உலகம்செய்திகள்

வெடித்து சிதறிய உலகின் மிகப்பெரும் மீன்தொட்டி – அறிய இன மீன்கள் பல உயிரிழப்பு!

Share

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ‘ராடிசன் புளூ’ என்கிற பிரபல நட்சத்திர ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலின் மையப்பகுதியில் 52 அடி உயரம் கொண்ட கண்ணாடியால் ஆன ராட்சத மீன்தொட்டி இருந்தது. இது உலகின் மிகப்பெரிய நிற்கும் உருளை வடிவிலான மீன் தொட்டியாக அறியப்பட்டது.

‘அக்வாடோம்’ என பெயரிடப்பட்ட இந்த மீன் தொட்டியில் சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு 100 வெவ்வேறு இனங்களை சேர்ந்த 1,500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை இந்த ராட்சத மீன் தொட்டி உடைந்து, சிதறியது. அதை தொடர்ந்து தொட்டியில் இருந்து வெளியேற தண்ணீர் ஓட்டலுக்கு வெளியே வந்து சாலையில் ஆறாக ஓடியது.

தொட்டியில் இருந்த நூற்றுக்கணக்கான அரியவகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து செத்தன. மின்தொட்டி உடைந்து கண்ணாடிகள் சிதறியதில் 2 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக ஹோட்டலில் இருந்த விருந்தினர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஓட்டலுக்குள்ளும், வெளியிலும் தரையில் கிடந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த டஜன் கணக்கான மீன்களை மீட்டனர்.

அவை பல்வேறு மீன் தொட்டிகளில் விடப்பட்டன. 1,500 மீன்களில் எத்தனை மீன்கள் செத்தன, எத்தனை மீன்கள் காப்பாற்றப்பட்டன என தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் பெரும்பாலான மீன்கள் இறந்துவிட்டதாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் கூறினார்.

ஹோட்டலுக்குள் வெப்பநிலை, மைனஸ் 6 டிகிரிக்கும் குறைவாக சென்றதால் மீன் தொட்டியின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...