2 18
உலகம்

மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்.., பரபரப்பை கிளப்பிய வீடியோ

Share

மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்.., பரபரப்பை கிளப்பிய வீடியோ

நில விவகாரத்தில் கிராம மக்கள் சேர்ந்து அரசு அதிகாரியை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தெலங்கானாவில், விகாராபாத் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருந்து நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயினும் கிராமத்திற்கு வந்துள்ளார். அவருக்கு எதிராக கோஷத்தை எழுப்பிய கிராம மக்கள் கடைசியில் வாக்குவாதத்தை ஏற்படுத்தினர்.

பின்னர், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின் அங்கிருந்து புறப்பட முயன்றார். ஆனால், கிராம மக்கள் அவரை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்திற்கு மேல் வாகனத்தில் ஏறி ஆட்சியர் கிளம்ப முயன்றார். அப்போது, அவர் ஏறிய வாகனத்தை கற்களால் தாக்கினர். இந்த சம்பவத்தில் ஆட்சியரின் வாகனம் சேதம் அடைந்தது.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...