download 28 1 3
இந்தியாஉலகம்செய்திகள்

சிறுவனை கொடூரமாக கொலை செய்த திருநங்கை!

Share

சிறுவனை கொடூரமாக கொலை செய்த திருநங்கை!

ஹைதராபாத்தில் 8 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்து சாக்கடையில் வீசிய திருநங்கையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்திலுள்ள சானத் நகரில் சாக்கடையில் சிறுவனின் உடல் மூட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அது வாசிம்கானின் மகனான, அப்துல் வாகித் என்ற 8 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது.

அப்பகுதியிலுள்ள CCTVயில் பார்க்கும் போது திருநங்கையான இம்ரான், மற்றொருவரோடு சாக்கு மூட்டையில் உடலை கொண்டு வந்து சாக்கடைக்குள் வீசியது பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து குற்றவாளியான திருநங்கை இம்ரானை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.

அத்துடன் விசாரணையில் இம்ரான் 8 வயது சிறுவனை அடித்து சித்திரவதை செய்ததோடு, சிறுவனை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலையை வலுக்கட்டாயமாக நனைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.இம்ரானுக்கு வயிறு சரியில்லை என சிறுவனின் தந்தையிடம் ORS வாங்கி கொடுத்து விட சொல்லியிருக்கிறார். அதனை கொண்டு வந்த போது சிறுவனை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

சிறுவனின் தந்தை வாசிம்கான் வீட்டருகே வசிக்கும் திருநங்கை இம்ரானிடம், 5 லட்சம் ரூபாய் சீட்டு போட்டுள்ளார்.

கடந்த வாரம் வாசிம்கான் சீட்டை எடுத்த நிலையில், இம்ரான் அந்த பணத்தை தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.இதனால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வாசிம்கானின் 8 வயது மகன் காணாமல் போயுள்ளார்.

மேலும் அதற்கு பழிவாங்கவே சிறுவனை கொலை செய்ததாக, திருநங்கை இம்ரான் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் இம்ரான் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கபடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...