WhatsApp Image 2022 09 18 at 12.43.43 PM
இலங்கைஉலகம்செய்திகள்

லண்டனை சென்றடைந்தார் ஜனாதிபதி

Share

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது ஜனாதிபதியை வரவேற்பதற்காக இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளரும், பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்திய பணிப்பாளருமான பென் மெல்லர், பிரித்தானிய மன்னரின் விசேட தூதுவர் பிரதி லெப்டினன்ட் டேவ் ஈஸ்டன், பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் வருகைத் தந்திருந்தனர்.

நாளை (19) லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை (21) நாடு திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டில் இல்லாத காரணத்தினால், அவரது அமைச்சு பொறுப்புக்களை நிர்வகிக்க இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோன், பதில் நிதி பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிடிய, பதில் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூகவூட்டல் அமைச்சராக கீதா குமாரசிங்க, பதில் தொழில்நுட்ப அமைச்சராக கனக ஹேரத் மற்றும் பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 09 18 at 12.43.36 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f495a7c6b1e
செய்திகள்இலங்கை

அரச கிளவுட் செயலிழப்பு: பல அரச இணைய சேவைகள் பாதிப்பு!

இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பச் செயலிழப்பு...

IMG 20241217 095933 800 x 533 pixel
செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தி சார்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைப்பதற்கான...

AP20222207925030
செய்திகள்இலங்கை

“மக்களுடனான பிணைப்பே ஆரோக்கியத்தின் ஆதாரம்” – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

தங்காலை, கால்டன் இல்லத்தில் இருந்தவாறு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...