corona
உலகம்செய்திகள்

கொரோனாவின் பிறப்பிடம் சீனாவே! – உறுதிப்படுத்தியது அமெரிக்கா

Share

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அங்கிருந்து உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. 3 ஆண்டுகளை கடந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று எங்கிருந்து உருவானது என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடிக்கிறது.

இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் உருவானது என பரவலாக குற்றம் சாட்டப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் அமெரிக்க மின்சக்தி அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில், “சீனாவின் உகானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டது” என கூறப்பட்டுள்ளது. இது கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது? என்கிற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பியிடம் ஆய்வறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், “உளவுத்துறையும், அரசின் பிற துறைகளும் இன்னும் அதை (கொரோனா எங்கிருந்து உருவானது என்பதை) ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இதுவரை உறுதியான முடிவு எதுவும் இல்லை.

எனவே நான் சொல்வது கடினம். ஜனாதிபதி ஜோ பைடன் விரும்புவது உண்மைகளை மட்டுமே. முழு அரசும் அந்த உண்மைகளை பெறுவதற்காக வடிவமைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். நாங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை” என கூறினார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...