Baby
உலகம்செய்திகள்

குழந்தையைப் பெற்று விமானத்தின் கழிவறைக் குப்பைத் தொட்டிக்குள் விட்டுச்சென்ற தாய்!!!

Share

விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் விட்டுச் செல்லப்பட்டிருந்த, பச்சிளம் குழந்தையை மொரிஷியசில் உள்ள ஒரு விமான நிலையத்தின் ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் குழந்தையைக் கழிவறையில் பிரசவித்துவிட்டு, அங்கேயே விட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த 20 வயதாகும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;

மொரிஷியஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான குறித்த விமானம் மடகாஸ்கர் நாட்டில் இருந்து ஜனவரி முதலாம் திகதி, சர் சிவசாகர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

விமானம் தரை இறங்கிய பின் மேற்கொள்ளப்படும் வழக்கமான சுங்க சோதனைகளின் போது, குழந்தை கழிவறையில் உள்ள குப்பைத்தொட்டியில் இருப்பது ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குழந்தையைப் பெற்றெடுத்த தாய் என்று சந்தேகிக்கப்படும் பெண் அது தமது குழந்தை அல்ல என்று ஆரம்பத்தில் மறுத்து வந்ததாகவும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் மிகச் சமீபத்தில் குழந்தையைப் பிரசவித்துள்ளார் என்ற விடயமும் மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தை பராமரிக்கப்பட்டு வரும், அதே மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அந்தப் பெண் பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

மொரிஷியசில் 02 ஆண்டுகள் பணிபுரிவதற்கான விசாவில் வந்துள்ள குறித்த மடகாஸ்கர் பெண் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய பின் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்.

அத்துடன் பெற்ற பிள்ளையை கைவிட்டுச் சென்ற விவகாரம் தொடர்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் மொரிஷியஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...