1731136 china
உலகம்செய்திகள்

சீனர்களை வாட்டும் வெப்பம்! – 90 கோடி மக்களுக்கு பாதிப்பு

Share

சீனா முழுவதும் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து இருந்து கடுமையான வெப்ப பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வெப்ப அலைகள் தொடர்ச்சியாக ஓகஸ்ட் மாதம் 2வது வாரம் வரை நீடித்திருக்கும் என்று குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

2022ம் ஆண்டுக்கான வெப்ப அலை முன்பே வந்து விட்டது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்துடன் தொடர்புடைய தேசிய வானிலை மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சன் ஷாவோ கூறியுள்ளார். இதனால், வடமேற்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தின் தென்கிழக்கு உள்ளிட்ட பகுதிகள் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஷாங்காய் நகரில் கடந்த புதன்கிழமை 40.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது கடந்த 1973ம் ஆண்டுக்கு பின்பு பதிவான அதிக வெப்பநிலையாகும். கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் ஹாங்ஷூ நகரில் தீவிர வெப்பம் பற்றிய 54 சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இது ஒரு நாளில் விடப்பட்ட வெப்பநிலைக்கான எச்சரிக்கை எண்ணிக்கையில் மிக அதிகம் ஆகும்.

அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், 90 கோடி பேர் பாதிக்கப்பட கூடும். ஒரு வாரத்தில் சீனாவின் பாதி நிலப்பகுதி பாதிப்பிற்குள்ளாகு. இந்த நீடித்த வெப்ப அலைகளால் மக்களின் வாழ்வு மற்றும் பயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளன.

சீனாவில் கொரோனா பெருந்தொற்றில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த சூழலில், அவர்களுக்கு சவால் விடும் வகையில் வெப்ப அலையும் சேர்ந்து இயல்பு வாழ்க்கையை புரட்டி போட உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 684d9895c5fed
உலகம்செய்திகள்

இதுவே தாக்குதலின் ஆரம்பம்.. நெதன்யாகு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

இனிவரும் காலங்களில் ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலிய பிரதமர்...

25 684daa7056229
உலகம்செய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட அமெரிக்க – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடத்தப்படவிருந்த குறித்த...

25 684db2d85251f
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை...

25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு...