உலகம்செய்திகள்

மீண்டும் பரிசோதனை – வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது

Share
miss
Share

வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிகளவில் ஏவுகணை சோதனையை நடத்தியது.

இதற்கிடையே அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக அறிவித்தன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

போர் பயிற்சியை தொடங்கினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் அமெரிக்கா, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது.

அந்த ஏவுகணையை கடலை நோக்கி வடகொரியா ஏவியது. இதுதொடர்பாக தென் கொரியா ராணுவம் கூறும்போது,

அதிகாலையில் ஏவப்பட்ட ஏவுகணை 66 நிமிடங்கள் வானில் பறந்து கடலில் விழுந்தது என்றும் சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்றது. இதற்கிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் விழுந்துள்ளது. அந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையில் இருந்து ஹொக் கைடா மாகாணத்தின் மேற்கு ஓஷிமா தீவு அருகே விழுந்ததாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்தார்.

இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா கூறும்போது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையானது வலிமையான எதிர் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வடகொரியாவின் உண்மையான போர் திறனை காட்டுகிறது. இந்த சோதனை, எதிரி படைகள் மீது அபாயகரமான அணு சக்தி எதிர்த்தாக்குதல் திறனுக்கு உண்மையான ஆதாரம் என்று தெரிவித்தது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
4 8
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை இழக்குமா அநுர தரப்பு..! வியூகம் வகுக்கும் சஜித்

நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஆளும் கட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் சிக்கல்...

5 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது....

3 8
இலங்கைசெய்திகள்

நீதிமன்றில் சரணடைந்த பிரசன்ன ரணவீர

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகிறது. போலி ஆவணங்களைத்...

6 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு...