rtjy 196 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் ஆதரவு நாடுகளுக்கு சவுதி வலியுறுத்து

Share

இஸ்ரேல் ஆதரவு நாடுகளுக்கு சவுதி வலியுறுத்து

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை உடன் நிறுத்துமாறு சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா இணையமூடாக முன்னெடுக்கும் பிரிக்ஸ்(BRICS) உச்சி மாநாட்டில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த நிலையிலேயே இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை கைவிட வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் இளவரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கு தீவிரமான மற்றும் விரிவான அமைதி செயல்முறையைத் தொடங்க வேண்டும்.

சவுதி அரேபியாவின் நிலை என்பது நிலையானது மற்றும் உறுதியானது. இரு நாடு தீர்வு தொடர்பான சர்வதேச முடிவுகளை நடைமுறைப்படுத்துவதைத் தவிர பாலஸ்தீனத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைய வழி இல்லை.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவது காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை ஏற்றுக்கொள்வதாக இல்லை. இவை அனைத்தும் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

காசா பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்படுவதை சவுதி அரேபியா ஏற்கவில்லை.

அங்கு மனிதாபிமான நிலைமைகள் மோசமடைவதைத் தடுக்க கூட்டு முயற்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7ஆம் திகதி முதல் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட்ட வேண்டும் என்று சவுதி அரேபியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 14,128 என்றும் இதில் சிறார்கள் எண்ணிக்கை 4,000 கடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்” என்றார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...