peru
உலகம்செய்திகள்

பெருவில் அவசர நிலை – மீண்டும் போராட்டம் வெடித்தது!

Share

தென்னமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவசர நிலையை அறிவித்த காஸ்டிலோ பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி அவரது பதவியை பறித்தனர். மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக காஸ்டிலோ கைது செய்யப்பட்டார். துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபராக பதவி ஏற்றார்.

இதற்கிடையே காஸ்டிலோ ஆதரவாளர்கள் போராட் டத்தில் குதித்தனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து பெருநாட்டில் கடந்த 14-ந் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் மற்றும் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர நிலையை மீறி அவர்கள் போராட்டங்களில் குதித்தனர். அயகுக்கோவில் உள்ளூர் நீதித்துறை மற்றும் வக்கீல் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர். பல இடங்களில் முக்கிய சாலைகளை மதித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

மேலும் 5 விமான நிலையங்களை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் விமான நிலையம் மற்றும் பிற இடங்களில் தாக்குதல்களை தடுக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தினர்.

ஆனாலும் காஸ்டிலோவை விடுவிக்க கோரியும், புதிய அதிபர் டினா பொலுவார்ட் ராஜினாமா செய்ய கோரியும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இதற்கிடையே நேற்று நடந்த வன்முறையில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வன்முறை பலி எண்ணிக்கை ௨௦ ஆக உயர்ந்தது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...