உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு வரலாறு காணாத அபராத தொகையை விதித்து தீர்ப்பளித்த ரஷ்யா

15 1
Share

கூகுள் நிறுவனத்திற்கு வரலாறு காணாத அபராத தொகையை விதித்து தீர்ப்பளித்த ரஷ்யா

ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கிணங்க அபராதத் தொகையாக 20 டெசிலியன் அமெரிக்க டொலர் ($20,000,000,000,000,000,000,000,000,000,000,000) விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த அபராதத் தொகையின் மதிப்பு 110 ட்ரில்லியன் டொலருக்கும் அதிகமாகும்.

அத்துடன், இது சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிடப்பட்ட உலகின் மொத்த உலக நாடுகளின் உற்பத்தியை விட அதிகமென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த அபராதத் தொகையானது உலகின் மிகப்பெரும் செல்வந்த நிறுவனமான கூகுளின் மதிப்பை விட 2 ட்ரில்லியன் டொலருக்கு அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த அபராதத்துடன், ஒன்பது மாதங்களுக்குள் இந்த ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கூடுதல் உத்தரவும் உள்ளது, அவ்வாறு இணங்கத் தவறும் பட்சத்தில் தண்டனை தினமும் இரட்டிப்பாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கூகுள் நிறுவனம் இந்த தீர்ப்பு குறித்து எவ்வித கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....