ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், அங்கு தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்நாட்டில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றன.
எனினும், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தயங்கி வருகிறது.
கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு புதிதாக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய கடந்த 12ஆம் திகதி ஒரே நாளில் 28 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் 973 பேர் உயிரிழந்தனர்.
ரஸ்யாவில் பதிவான அதிகபட்ச ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு இது எனப் பதிவாகியிருந்த நிலையில், தற்போது, மீண்டும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இதன்படி, கொரோனாத் தொற்றுக்குள்ளாகி ஒரே நாளில் 986 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்மை குறிப்பிடத்தக்கது.
Leave a comment