8 38
உலகம்செய்திகள்

போர் தொடர்பில் புடினுக்கு ட்ரம்ப் வழங்கிய அறிவுறுத்தல்

Share

போர் தொடர்பில் புடினுக்கு ட்ரம்ப் வழங்கிய அறிவுறுத்தல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் உக்ரைனை ஆக்கிரமிக்க முயல வேண்டாம் என தான் அறிவுறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சமூக ஊடக தொகுப்பாளர் ஜோ ரோகனின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் ஆட்சியில் இருந்திருந்தால் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றிருக்காது எனவும் அது அவசியமில்லாதது என தான் நினைப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஒரு பொருட்டாக கூட புடின் மதிக்கவில்லை என கூறிய அவர், புடினுடன் தான் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உனை சிறிய ரொக்கெட் மனிதன் என விபரித்த ட்ரம்ப், அவரை சந்தித்த போது, நீங்கள் நரகத்தில் எரிக்கப்படுவிர்கள் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

நான் ஆட்சியில் இருக்கும் வரை வடகொரியாவுடன் அமெரிக்கா நல்லுறவையே பேணியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஆயுதங்களை உருவாக்குவதை விடுத்து கடற்கரைக்கு சென்று ஓய்வெடுக்குமாறு கிம் ஜொங்-உனை வலியுறுத்தியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...