tamilni 45 scaled
உலகம்செய்திகள்

இணைய சேவை, மின்சாரம் முடக்கம்… மொத்தமாக ஸ்தம்பித்த நான்கு ஐரோப்பிய நாடுகள்

Share

இணைய சேவை, மின்சாரம் முடக்கம்… மொத்தமாக ஸ்தம்பித்த நான்கு ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் மின் ரயில் சேவை மற்றும் இணைய சேவை மொத்தமாக முடங்கியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான அல்பேனியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, குரோஷியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய நாடுகளில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக மின் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மாண்டினீக்ரோ பகுதியில் 400 கிலோவாட் மின்கடத்தி வெடித்ததை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நான்கு நாடுகளிலும் போக்குவரத்து விளக்கு வேலை செய்யாத நிலையில், சாலைகளில் வாகனங்கள் சிக்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைய சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலர் தங்கள் வாகனங்களை நெரிசலில் இருந்து மீட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய மருந்து வாங்கவும் முடியாமல் பலர் திணறியுள்ளனர்.

மட்டுமின்றி வெப்பநிலை 40C என சுட்டெரிக்க, திடீர் மின்வெட்டும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள Banja Luka, Prnjavor, Kotor Varoš, Sarajevo, Derventa, Palam, Trebinje, Gack மற்றும் Nevesinje ஆகிய பகுதிகளில் மொத்தமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சில பகுதிகளில் மின்சாரம் மீண்டதுடன், போக்குவரத்தும் சீரானாதாக தகவல் வெளியானது. குரோஷியாவில் Dubrovnik மற்றும் Konavle பகுதிகள் மொத்தமாக ஸ்தம்பித்தது.

இது சர்வதேச சதியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் குரோஷியா தரப்பில் கூறப்பட்டது. அல்பேனியாவில் தலைநகர் Tirana உட்பட Durrës, Elbasan, Kukës மற்றும் Korçë ஆகிய நகரங்கள் மொத்தமாக ஸ்தம்பித்தன.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...