உலகம்செய்திகள்

சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை

Share

சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை

கனடாவின் இரண்டு பிரதான சீக்கிய அமைப்புகள், இந்தியாவுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

சீக்கிய தலைவர் ஒருவர் படுகொலையில் இந்திய அரசாங்கத்திற்கு உறுதியான தொடர்பிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அறிவித்த நிலையிலேயே இந்த இரு அமைப்புகளும் கனேடிய அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

ஒன்ராறியோவின் குருத்வாராஸ் கமிட்டி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் குருத்வாராஸ் கவுன்சில் ஆகிய இரு சீக்கிய அமைப்புகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளன.

ஜூன் மாதத்தில் நடந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் வெளிநாட்டு சதி இருப்பது தொடர்பில் கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒருமித்த கருத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளன.

செப்டம்பர் 18ம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அம்பலப்படுத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடிய உளவு அமைப்புகள் திரட்டிய தரவுகளின் அடிப்படையில், இந்திய அரசாங்கத்திற்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் தொடர்பிருப்பதாக உறுதி செய்திருந்தார்.

காலிஸ்தான் பிரிவினைவாதி என குறிப்பிட்டு ஹர்தீப் சிங் நிஜ்ஜரை கைது செய்ய இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஆணை பிறப்பித்திருந்தது. ஆனால் தொடர்புடைய படுகொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்றே இந்தியா தற்போது மறுத்து வருகிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் விளக்கமளித்த பின்னர், என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவிக்கையில், இந்த கொலை வழக்கு விசாரணையில் இந்தியாவையும் உட்படுத்த வேண்டும் என தாம் கியூபெக் மேல்முறையீடு நீதிமன்றத்திற்கு எழுத்து மூலமாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...