மீண்டும் சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான்!!

GREY LIST 1

இதனால் கடந்த 3 ஆண்டாக பாகிஸ்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் உள்ளது. இது ஜூன் 2018-ல் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது.

அதன்பிறகு 27 நிபந்தனைகள் கொண்ட செயல் திட்டம் வழங்கப்பட்டது. அதை செயல்படுத்தத் தவறினால் தடுப்பு பட்டியலில் நீடிக்க வழிவகுக்கும் என எச்சரிக்கை விடப்பட்டது.

சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் செயல் திட்டத்தின் 27 நிபந்தனைகளையும் பாகிஸ்தான் பின்பற்றத் தவறிவிட்டது.

கடனில் மூழ்கிய பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேற முயன்ற முயற்சி தோல்வியடைந்தது.

கடும் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், சாம்பல் பட்டியல் நிலை காரணமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கடினமாக உள்ளது.

இந்நிலையில், சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாகிஸ்தானை சாம்பல் நிறப் பட்டியலில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WorldNEws

 

Exit mobile version