jeyshankar
இந்தியாஉலகம்செய்திகள்

பயங்கரவாதத்தின் மையமாக இன்றும் பாகிஸ்தான்!

Share

உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஹினா ரப்பானி அண்மையில் தெரிவித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்துள்ள பதிலில்,

அவர்கள் (பாகிஸ்தான்) சொல்கிறார்கள், உண்மை என்னவென்றால், இன்று உலகம் பயங்கரவாதத்தின் மையமாக அவர்களைப் பார்க்கிறது. இந்த பிராந்தியத்தில் மற்றும் பிராந்தியத்திற்கு அப்பால், பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது என்பதை உலகம் இன்னும் மறந்து விடவில்லை.

எனவே, அவர்கள் கற்பனையில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களை பற்றி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் தனது நடவடிக்கையை சரி செய்து, நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும்.

இன்னும் எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கடைப் பிடிக்க விரும்புகிறது என்பதை அந்நாட்டு அமைச்சர்கள்தான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். உலகின் மற்ற நாடுகள் இன்று பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்கின்றன. பாகிஸ்தானும் வளர்ச்சிக்கு முயற்சி செய்ய வேண்டும் – என குறிப்பிட்டார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...