உலகம்செய்திகள்

லாகூர் விமான நிலையம் அருகில் அடுத்தடுத்து மூன்று குண்டு வெடிப்புகள்

5 10
Share

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் (Lahore ) விமான நிலையம் அருகே அடுத்தடுத்து மூன்று குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியுள்ளதுடன், அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறியதுடன், லாகூர் விமான நிலையத்திலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்ததாக கூறப்படுகிறது.

லாகூரில் குண்டு வெடிப்பு நடந்ததை அந்நாட்டு பொலிஸார் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வோல்டன் வீதியில் குண்டு வெடிப்பு நடந்தது என்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நள்ளிரவில் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை மூடியதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
3 10
உலகம்செய்திகள்

வத்திக்கான் புகைப்போக்கியில் இன்று இரண்டாவது நாளாகவும் கறுப்புப் புகை

வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திற்கு மேலே உள்ள புகைப் போக்கியில் இருந்து இன்றும் கறுப்பு புகை வெளியானது....

4 10
உலகம்செய்திகள்

இந்திய ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்திய (India) ஆளில்லா விமானம் ஒன்றை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

1 9
உலகம்செய்திகள்

ஒப்பரேசன் சிந்தூர்- வெளியானது செயற்கைகோள் புகைப்படங்கள்

“ஒப்பரேசன் சிந்தூர்” திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிரதேசங்கள் மீது இந்திய இராணுவம்...

29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...