tamilni 174 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

கனடா – ஒட்டாவா அறுவர் படுகொலை: சந்தேகநபர் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

Share

கனடா – ஒட்டாவா அறுவர் படுகொலை: சந்தேகநபர் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் வசிக்கும் இலங்கையர்கள் 6 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கை இளைஞன் பற்றிய மேலும் பல தகவல்களை கனேடிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவனில் உள்ள அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்திருந்தது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கனடாவில் கல்வி கற்கும் பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது அந்த இளைஞன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டாவா வரலாற்றில் மிக மோசமான படுகொலைச் சம்பவம் இது என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பிராங்க் டி சொய்சாவின் நடத்தை அண்மைக்காலமாக மாறியுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிராங்க் டி சொய்சாவின் அத்தையான அனுஷா டி சொய்சா கனடா ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இந்த சம்பவம் என்னை உலுக்கியது, அந்த குடும்பம் அவரை மிகவும் சிறப்பாக நடத்தியது, அந்த குடும்பம் மிகவும் நல்ல குடும்பம், இதை கேட்டு நான் கல்லாகிவிட்டேன், என்னால் இன்னும் தூங்க முடியவில்லை” ‘

எங்களுடனான எல்லா உறவுகளையும் துண்டித்துவிட்டார். எங்களுடனான எல்லா தொடர்புகளையும் அவர் தடுத்துவிட்டார். எங்கள் தொலைபேசி எண்களில் இருந்தும் சமூக ஊடகங்களில் கூட எங்களை அகற்றினார்.

இது போன்ற ஒன்றை நான் கனவில் கூட நினைத்ததில்லை.

மேலும், தனது சகோதரரின் மூத்த மகன் பிராங்க் டி சொய்சா 2 வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு வந்ததாகவும், அவர் மிகவும் அமைதியான இளைஞராகவும் மிகவும் நல்ல மனிதர் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

பிராங்க் டி சொய்சா கனடாவுக்கு வந்த பின்னர் முதல் மாதம், அவர் தனது அத்தையான அனுஷா டி சொய்சாவுடன் அவரது வீட்டில் தங்கியிருந்தார்” என்றார்.

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...