1 1 2 scaled
உலகம்செய்திகள்

லூலூ மாலில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்: வைரலாகும் வீடியோ

Share

லூலூ மாலில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்: வைரலாகும் வீடியோ

பெங்களூருவில் உள்ள லுலு மாலில் இளம்பெண்ணிடம் முதியவர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ராஜாஜி நகரில் லூலூ மால் உள்ளது.

இந்த மாலில் இளம்பெண் ஒருவரை முதியவர் ஒருவர் தகாத முறையில் தொடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான வீடியோவை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பயனர், ” மாலில் இருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் அந்த முதியவர் இதுபோன்ற தகாத செயலில் ஈடுபட்டார்.

முதலில் நான் அவரை மிகவும் நெரிசலான பகுதியில் பார்த்த போது, அவர் மீது சந்தேகமாக உணர்ந்தேன். வீடியோ பதிவு செய்ய அவரைப் பின் தொடர்ந்தேன்.

அப்போது அவர் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டது பதிவானது. இதுகுறித்து மால் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் அந்த நபரைத் தேடிப்பார்த்தனர் ஆனால், அந்த முதியவரைக் காணவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் முதற்கட்ட விசாரணையைத் தொடக்கி, ஐபிசி பிரிவு 354 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை தேடி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...