7 36
உலகம்

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

Share

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

லெபனான் (lebanon)மீதான இஸ்ரேலின்(israel) தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு(sri lanka) உதவும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பலர் கொல்லப்பட்டுள்ளதோடு, சுமார் 1500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், லெபனானில் தற்போது பெரும் பதற்றமானதொரு சூழல் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இலங்கையர்களுக்கு உதவும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கிணங்க, முதலாவது செயலாளரான சனத் பாலசூரியவைத் தொடர்புக் கொள்ள 009 617 038 6754 என்ற தொலைபேசி இலக்கத்தையும் மூன்றாவது செயலாளரான பிரியங்கனி திஸாநாயக்கவை தொடர்புக் கொள்ள 009 618 154 9162 என்ற தொலைபேசி இலக்கத்தையும் தூதரகம் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், மொழிபெயர்ப்பாளருக்கான தொலைபேசி இலக்கமாக 009 618 136 3894 எனும் இலக்கமும் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
64 magnitude earthquake strikes baculin philippines no tsunami warning issued 1767762531718
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.7 மெக்னியூட் அளவில் அதிர்வு – சுனாமி எச்சரிக்கை இல்லை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியான மிண்டானாவோ (Mindanao) தீவில் இன்று (07) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....

images 11 2
செய்திகள்உலகம்

நட்பு எதிர்ப்பாக மாறுமா? – மோடி குறித்து ட்ரம்ப் வெளியிட்ட சுவாரசிய தகவல்

அமெரிக்காவின் குடியரசுக் கட்சி (GOP) உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர்...

articles2FsMaBXkmy9LVDYQUjS4FF
செய்திகள்உலகம்

அட்லாண்டிக் கடலில் உச்சக்கட்ட பரபரப்பு: ரஷ்யாவின் பாதுகாப்பை மீறி வெனிசுலா எண்ணெய் கப்பலை சிறைப்பிடித்தது அமெரிக்கா!

வெனிசுலா மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறித் தப்ப முயன்ற ‘மரைனேரா’ (Marinera) என்ற எண்ணெய்...

nepal
செய்திகள்உலகம்

நேபாளத்தில் மதவாத வன்முறை: இந்திய எல்லைகள் அதிரடியாக மூடல்; பிர்கஞ்ச் நகரில் ஊரடங்கு உத்தரவு!

இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நேபாளத்தின் சில பகுதிகளில் மதவாத வன்முறைகள் வெடித்துள்ளதை அடுத்து, பாதுகாப்பு...