marburg
உலகம்செய்திகள்

ஆபிரிக்காவில் புதிய கொடிய தொற்று – 9 பேர் உயிரிழப்பு

Share

மேற்கு ஆபிரிக்கா கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் – 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.

மார்பர்க் வைரஸ் என்பது மிகவும் ஆபத்தான நோய்க் கிருமியாகும். இது கடுமையான காய்ச்சலை அடிக்கடி இரத்தப்போக்குடன் ஏற்படுத்துகிறது. மேலும் பல உறுப்புகளை பாதிப்படைய செய்து, உடலின் செயல் திறனைக் குறைக்கிறது. இதுவரை 16 பேருக்கு அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

மேலும், பரவாமல் தடுக்க கிட்டத்தட்ட 200 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இது பிலோ வைரஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாகும். இதில் எபோலா வைரஸும் அடங்கும். இந்த நிலையில், தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு மார்பர்க் கிருமியின் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மார்பர்க் வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த வித சிகிச்சையோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...