1 23
உலகம்

பேஜர், வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்தது யார்? இஸ்ரேலிய பிரதமர் சொன்ன உண்மை

Share

பேஜர், வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்தது யார்? இஸ்ரேலிய பிரதமர் சொன்ன உண்மை

லெபனானின் மீதான பேஜர் தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை ஓராண்டை தாண்டி நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஈரான் ஆதரவு படையான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது.

இதையடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரையும் குறிவைத்து இஸ்ரேல் தங்களது தாக்குதலை தொடங்கியது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17 மற்றும் 18ம் திகதிகளில் லெபனானில் உள்ள பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்து மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தின.

இதில் 40 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 3000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தொழில்நுட்ப ரீதியான தாக்குதலை இஸ்ரேல் தான் முன்னெடுத்து இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டி இருந்தது, ஆனால் இதற்கு அப்போது இஸ்ரேல் மறுப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் லெபனானில் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்க செய்வதற்கான உத்தரவை வழங்கியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளார்.

“மனித குலத்திற்கு எதிராகவும், தொழில்நுட்பத்திற்கு எதிராகவும் இஸ்ரேல் பயங்கரமான போரை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டு” பேஜர் தாக்குதல் தொடர்பாக ஹிஸ்புல்லா அமைப்பினர் ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் நிறுவனத்திடம் புகார் அளித்து இருந்தது.

இந்த புகார் அளிப்பட்ட சில நாட்களில் பேஜர் தாக்குதல் நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக் கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நெதன்யாகுவின் செய்தி தொடர்பாளர் ஓமர் டோஸ்டரி வழங்கிய தகவலில், பெஞ்சமின் நெதன்யாகு தான் லெபனானில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலுக்கு பச்சை கொடி காட்டியது என்று தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...

01 24
செய்திகள்உலகம்

டொலர் நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு: பிரதான வங்கிகளின் இன்றைய நிலவரம்!

இலங்கையிலுள்ள பிரதான வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (மார்ச்...

01 23
செய்திகள்உலகம்

ஈரானியப் பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையத் தடை: 6 மாத காலத் தற்காலிகத் தீர்மானம்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் மற்றும் ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, ஈரானியப்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...