1 22
உலகம்

வியக்க வைக்கும் “டைட்டானிக்” நாயகனின் சொத்து மதிப்பு

Share

வியக்க வைக்கும் “டைட்டானிக்” நாயகனின் சொத்து மதிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த லியானர்டோ டிகாப்ரியோ (Leonardo DiCaprio) ஹாலிவுட் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

1991ஆம் ஆண்டு வெளியான Critters 3 படத்தின் மூலம் அறிமுகமான டிகாப்ரியோ, 1997யில் வெளியான ‘டைட்டானிக்’ படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகராக மாறினார்.

குறிப்பாக இப்படத்தின் மூலம் இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். Catch Me If You Can, The Departed, Blood Diamond, Shutter Island படங்கள் மூலம் நடிப்பில் மிரட்டிய டிகாப்ரியோ, Inception மற்றும் Django Unchained படங்களில் நடித்து முத்திரை பதித்தார்.

எனினும் அவரது ஆஸ்கர் கனவு 2015யில் வெளியான The Revenant படத்தின் மூலம் நிறைவேறியது.

படங்களில் நடிப்பது மற்றும் ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோ மூலமாக டிகாப்ரியோ 300 மில்லியன் டொலர்கள் (சுமார் 2500 கோடி) சொத்து குவித்துள்ளார்.

சைவ சிற்றுண்டி பிராண்ட் ஆன HIPPEASயின் முதலீட்டாளராகவும் உள்ள டிகாப்ரியோ, தாவர அடிப்படையிலான உணவு மற்றும் பான பிராண்ட் Califia Farmsயின் முதலீட்டாளராகவும் உள்ளார்.

அதேபோல் இன்னும் சில Brandகளிலும் முதலீடு செய்து அதன் வாயிலாகவும் டிகாப்ரியோ வருமானம் ஈட்டுகிறார்.

டிகாப்ரியோவின் ஆடம்பர வில்லாவின் மதிப்பு 3.5 மில்லியன் பவுண்டுகள் ஆகும். Range Rover SV, Tesla Roadster, Fisker Karma, Tesla Model S, Porsche Cayenne S உள்ளிட்ட ஆடம்பர கார்களை டிகாப்ரியோ வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...

iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...