உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூரில் Jem தலைவர் மசூத் அசார் கொல்லப்பட்டாரா?

18 7
Share

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் Jem பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் நேற்று தாக்கியழித்துள்ளது.

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாத முகாம்களில், பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது என்னும் பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் மற்றும் முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா மறைவிடங்கள் ஆகியவை தாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது அங்கு இருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதேவேளையில், மசூத் அசாரின் சகோதரி உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

மசூத் அசார், 2019 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

1995 ஆம் ஆண்டு பயங்கரவாத குழுக்களுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்க, ஸ்ரீநகருக்கு போலி அடையாளத்தில் வந்த போது, இந்தியா அவரை கைது செய்தது.

அதன் பின்னர், 1999 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் சம்பவத்தின் போது, பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக மசூத் அசார் விடுவிக்கப்பட்டார்.

மசூத் அசாரின் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமது, 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், 2000 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் மீதான தாக்குதல், 2016 ஆம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் மற்றும் 2019 ஆம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதல் போன்ற பல பெரிய பயங்கரவாத சம்பவங்களை நடத்தியது.

Share
Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...