1747908 london
உலகம்செய்திகள்

லண்டன் ரயில் நிலையத்தில் தீ விபத்து!

Share

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கொளுந்து விட்டு எரிந்த தீ, வாகனம் நிறுத்துமிடத்துக்கும் பரவியது. இதனால் ரயில் நிலையத்தில் இருந்து பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது.

இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் வேகமாக தீ பரவியதால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர்.

ரயில் நிலையம் அருகே வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டு கதவு, ஜன்னல்களை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தால் ரயில் நிலையம் மூடப்பட்டது.

இதனால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை தடகளப் பயிற்சியின் போது சோகம்: மாணவர் ஒருவர் திடீர் உயிரிழப்பு!

புத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11-ஆம் தர மாணவர் ஒருவர்,...

20 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மார்ச் 17 முதல் 20 வரை இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது: முக்கிய விவாதங்களுக்குத் திட்டம்!

பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர்...

19 8
செய்திகள்இலங்கை

அஸ்வெசும மார்ச் மாதக் கொடுப்பனவு: நாளை முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவை, நாளை (மார்ச் 12)...

18 10
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது...