அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஷ் தெரிவு செய்தமை ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலகெங்கிலும் உள்ள பலருக்கும் ஒரு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஷ் உள்ளார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந் நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஷை சந்தித்துள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
அமெரிக்காவின் துணை அதிபராக உங்களைத் தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.
ஜோ பைடன் தலைமையின் கீழ் எங்கள் இரு நாட்டு தரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள்.
இந்தியா வருகைக்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் – எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஷ்,
இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே துடிப்பான மக்கள் தொடர்பு ஒரு பாலமாக உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்துள்ளார்.
Leave a comment