செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளை குறி வைத்து பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையின் இந்த தாக்குதலால் அந்த வழியாக செல்ல வேண்டிய சரக்கு கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை உருவானது.
மேலும் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய சரக்குகள் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டு, நாட்டில் பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிப்பதுடன் விலை உயரும் அபாயமும் அதிகரித்தது.
இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தும் விதமாக பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தளங்கள் மீது நேற்றிரவு அதிரடி வான்வழித் தாக்குதலை இணைந்து நடத்தியுள்ளது.
அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து போர் கப்பல்கள், போர் விமானங்கள் ஆகியவற்றின் உதவியோடு ஏமன் தலைநகர் Sanaa Hodieda, Saada, மற்றும் Dhamar ஆகிய பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 5 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், 6 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் ஏமன் செய்தி நிறுவனம் SABA தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க-பிரித்தானிய படைகளின் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று ஹவுதி எச்சரித்துள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பிறகு பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தங்கள் பணியாளர்கள் மீதான தாக்குதலை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்ற தகவலை இந்த தாக்குதலின் மூலம் காட்டியுள்ளோம்.
மேலும் உலகின் மிக முக்கியமான வணிக பாதையின் சுதந்திரத்தை கெடுக்க நினைக்கும் எதிரிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதலுக்கு அவுஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் பங்களிப்பு இருந்ததாகவும் அவர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பேசிய போது, ஹவுதி படையினரின் தாக்குதலை அனுமதிக்க முடியாது, பிரித்தானியா எப்போது சுகந்திரமான வர்த்தக பாதைக்கு ஆதரவாக நிற்கும், எனவே தற்காப்புக்காக வரையறுக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Comments are closed.