24 65a118680d7e8
உலகம்செய்திகள்

ஜேர்மனியை ஸ்தம்பிக்கவைத்துள்ள வேலை நிறுத்தம்: தாக்குதலிலிருந்து தப்பிய அமைச்சர்

Share

ஜேர்மனியில் வாழ்க்கைச் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அதற்குக் காரணம், மூன்று நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளும், போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்துள்ள விவசாயிகளும்.

ஜேர்மனியில் ரயில் சாரதிகள் புதன்கிழமை முதல், இன்று வெள்ளிக்கிழமை வரையிலான மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்தம் அறிவித்துள்ளார்கள். பெரும்பாலான ரயில்கள் ஓடாததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது பொது வேலைநிறுத்தம் போல் உள்ளது என்கிறார், ஆய்வமைப்பு ஒன்றைச் சேர்ந்த நிபுணரான கார்ஸ்டன் நிக்கல் (Carsten Nickel).

1906க்குப் பின் ஜேர்மனி ஒரு பொது வேலைநிறுத்தத்தைக் கண்டதில்லை என்கிறார் அவர். இது ஜேர்மனிக்குப் புதிது என்று கூறும் அவர், இப்படி வேலைநிறுத்தமும், அரசியல் வன்முறையும் இதற்கு முன் இருந்ததில்லை என்கிறார் அவர்.

சமீபத்தில் பொருளாதாரத்துறை அமைச்சரான ராபர்ட் (Robert Habeck) தாக்கப்படுவதிலிருந்து சற்றே தப்பியதைத்தான் கார்ஸ்டன் குறிப்பிடுகிறார்.

சுமார் 300 விவசாயிகள் கூட்டமாகக் கூடி, அமைச்சர் பயணித்த படகிலிருந்து அவரை இறங்கவிடாமல் தடுத்துள்ளார்கள். அப்போது, கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஜேர்மனியின் பல்வேறு நகரங்களில் ட்ராக்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அரசு, டீசல் மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதை எதிர்த்து அவர்கள் பெர்லினில் ஒன்று திரண்டுள்ளார்கள். உண்மையில், கொரோனா நிதியைக்கொண்டு பல்வேறு நிதியுதவிகளை செய்ய அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், கொரோனா உதவி நிதியை வேறு காரணங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என ஜேர்மன் அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால், வாக்களித்த சில விடயங்களை அரசால் நிறைவேற்றமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...