உலகம்செய்திகள்

இஸ்ரேல் கொடி விவகாரம்… தலையை வெட்டிவிடுவதாக மாணவரை மிரட்டிய பாடசாலை ஆசிரியர்

Share
3 15 scaled
Share

இஸ்ரேல் கொடி விவகாரம்… தலையை வெட்டிவிடுவதாக மாணவரை மிரட்டிய பாடசாலை ஆசிரியர்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர், தனது வகுப்பில் இருந்த மாணவியின் தலையை துண்டித்து விடுவதாக மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய மாணவர் இஸ்ரேல் கொடியை அவமதித்ததாக கூறியே, அந்த ஆசிரியர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பெஞ்சமின் ரீஸ் என்ற ஆசிரியர் மீது பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் சிறார்களை கொடுமைப் படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஜார்ஜியா மாகாணத்தில் வார்னர் ராபின்ஸ் நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு சமூகக் கல்வி ஆசிரியராக ரீஸ் பணியாற்றி வந்துள்ளார். தொடர்புடைய சம்பவமானது டிசம்பர் 7ம் திகதி மூன்று மாணவர்கள் மீது கோபப்படுவதைக் கண்ட மற்றொரு ஆசிரியரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், பலர் கேட்கும் வகையில் கோபத்தில் தலையை விட்டிவிடுவேன் என ஆசிரியர் ரீஸ் கொந்தளித்துள்ளதை இன்னொரு ஆசிரியரும் கேட்டுள்ளார். அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் 51 வயதான ஆசிரியர் ரீஸ் மாணவர்களை அச்சுறுத்துவதைக் கேட்டனர்.

இந்த நிலையில் ஆசிரியர் ரீஸ் மிரட்டல் விடுத்த மாணவி பொலிசாரிடம் தெரிவிக்கையில், இஸ்ரேல் கொடி தொடர்பில் அந்த ஆசிரியரிடம் சந்தேகம் எழுப்பியதாகவும், அதன் காரணமாகவே ஆசிரியர் ரீஸ் கோபத்தில் கத்தியதாகவும் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவி சந்தேகம் எழுப்பிய இஸ்ரேலிய கொடியனது வகுப்பறையில் காணப்பட்டுள்ளது. ஆசிரியர் ரீஸ் தாம் ஒரு யூதர் எனவும், தமது குடும்பத்தினர் தற்போதும் இஸ்ரேலில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதற்கும் இஸ்ரேலிய கொடிக்கும் தொடர்பில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். அத்துடன், ஒரு யூதரிடத்தில் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவது தொடர்பில் விவாதிப்பது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...