tamilni 209 scaled
உலகம்செய்திகள்

காசா நாடாளுமன்றத்தை தன்வசப்படுத்திய இஸ்ரேல்

Share

காசா நாடாளுமன்றத்தை தன்வசப்படுத்திய இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டுவரும் தாக்குதலின் ஒரு நகர்வாக இஸ்ரேல் தரப்பு ஹமாஸின் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியை கைப்பற்றியுள்ளது.

காசாவில் தரைவழியாக முன்னேறும் இஸ்ரேல் இராணுவம் இந்த நடவடிக்கையை நேற்று(15.11.2023) முன்னெடுத்திருந்தது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஏவுகணை குண்டு வீச்சு தாக்குதலை ஆரம்பித்தனர்.

அதன்பின் தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள், இஸ்ரேலியர்கள் 1,200 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொலைசெய்திருந்தனர்.

மேலும், 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச் சென்று பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதன்காரணமாக இஸ்ரேல் இராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குலில் ஈடுபட்டு வருவதோடு தரைவழி தாக்குதல் நகர்வையும் நீடித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸின் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதி கைப்பற்றியமை தொடர்பில் இஸ்ரேல் வெளியிட்டுள்ள செய்தியில்,

காசா எல்லையில் பீரங்கி வாகனங்களுடன் காத்திருந்த இஸ்ரேல் இராணுவம், காசாவின் வட பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஊடுருவியது.

இஸ்ரேல் விமானப்படை ஹமாஸ் போராளிகளின் இருப்பிடங்களில் குண்டு மழை பொழிய, இஸ்ரேல் தரைப்படை படிப்படியாக முன்னேறி, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றி வந்தது.

காசாவின் மருத்துவமனைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் போராளிகளையும் இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்கினர்.

காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனையான அல்-குத் மருத்துவமனைக்கு வெளியே ஏவுகணைகளுடன் பாதுகாப்பு பணியில் இருந்த ஹமாஸ் போராளிகள் 24 பேரை இஸ்ரேல் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவுத் தலைவர் காமிஸ் தபாபாஸ், உயர்நிலை இராணுவ அதிகாரி தஷின் மஸ்லாம் உட்பட ஹமாஸ் படையின் முக்கிய அதிகாரிகள் அனைவரையும் இஸ்ரேல் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்ற கட்டிடத்தையும், இஸ்ரேல் இராணுவத்தினர் கைப்பற்றி உள்ளே புகுந்தனர்.

காசாவின் வடபகுதியில் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து முக்கிய பகுதிகளும் இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது” என கூறப்பட்டுள்ளது.

காசா நகரத்தில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையில் மின்சாரம், எரிபொருள், குடிநீர், அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நோயாளிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளதாக மனிதாபிமான அமைப்புக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, எடை குறைந்த குழந்தைகளை காப்பாற்றுவதற்கு இன்குபேட்டர் வசதி மிகவும் அத்தியாவசியமானதாகும்.

ஆனால், மின்சாரம் இன்றி அவற்றின் செயல்பாடு முடங்கியுள்ளதால் குழந்தைகளை வெளியில் எடுத்து வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காசா வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...